இறுதிச் சடங்கு செய்யும் ரோபோ!
ஜப்பானில் ஒரு நிறுவனம் ரோபோக்களை வைத்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறது.
ஜப்பானைச் சேர்ந்த பெப்பர் ரோபோ நிறுவனம், புத்த துறவி ரோபோக்களை வைத்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறது. “இறுதிச் சடங்குகளை நிகழ்த்தக்கூடிய மனிதர்கள் எளிதில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செலவு அதிகமாகிறது. அதற்காகத்தான் இந்த ரோபோக்களை உருவாக்கியிருக்கிறோம். ஜப்பானிய பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு மனிதர் களைப் போலவே இறுதிச் சடங்குகளை நிகழ்த்திவிடுகிறது. கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் கல்லறை கண்காட்சியில் இதை காட்சிப்படுத்தினோம். நல்ல வரவேற்பு இருந்தது. இந்த வருட கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம்” என் கிறார் பெப்பர் ரோபோ நிறுவனர்.