போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானிகள் உயிர் தப்பினர்
நாசிக் அருகே சோதனை ஓட்டத்தின் போது போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகள் உயிர் தப்பினர்.
நாசிக்,
மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்) நிறுவனம் ரஷியாவின் உதவியுடன் ‘சுகோய்’ போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பதற்கு முன் விமானப்படை அல்லது எச்.ஏ.எல். நிறுவனத்தில் பணியாற்றும் வீரர்களால் சோதிக்கப்படுகிறது.
அப்படி சுகோய் 30 எம்.கே.ஐ. ரகத்தை சேர்ந்த விமானம் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று மராட்டியத்தின் நாசிக் அருகே நடந்தது. காலை 11 மணியளவில் 2 விமானிகள் இந்த போர் விமானத்தை இயக்கி பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த விமானம் பிம்பல்கான் அருகே நடுவானில் பறந்தபோது திடீரென வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. முன்னதாக விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து தப்பினர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் நாசிக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.