மனைவியை அடித்து கொன்ற மதுபான பார் உரிமையாளர் போலீசில் சரண்

நவிமும்பையில் மனைவியை அடித்து கொன்ற மதுபான பார் உரிமையாளர் போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2018-06-27 23:11 GMT
மும்பை,

நவிமும்பை கோபர்கைர்னேயை சேர்ந்தவர் தர்மா கவுடா (வயது38). இவரது மனைவி ரேகா (32). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தர்மா கவுடாவுக்கு சொந்தமாக பன்வெல், கோபர்கைர்னே, ஐரோலி ஆகிய இடங்களில் மதுபான பார்கள் உள்ளன.

இதுதவிர அவர் வாஷி உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகளும் நடத்தி வருகிறார். ரேகாவின் நடத்தையில் தர்மா கவுடாவுக்கு சமீபகாலமாக சந்தேகம் இருந்து வந்தது.
இது தொடர்பாக கணவர், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. இதில், கடும் கோபம் அடைந்த தர்மா கவுடா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, தர்மா கவுடா போலீசில் சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்