வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் உள்பட 12 பேர் கைது - 6 துப்பாக்கிகள் பறிமுதல்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தொழில் அதிபர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-06-27 22:46 GMT
மும்பை,

அரியானா மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராகேஷ் கர்லா (வயது40). இவரது தோழி ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அவர் அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் தனது நண்பர்களுடன் வந்து கலந்து கொண்டார்.பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, திடீரென ராகேஷ் கர்லா தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு உள்ளார்.

ஆனால் இதுபற்றி பார் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை. இருப்பினும் மறுநாள் அம்போலி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேஷ் கர்லா, அவரது நண்பர்கள் மோகித் பட்லா (23), சோனு சகோரா (33), மகேந்திரா மாலிக் (32), சாகில் தாமிஜா (25) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் துப்பாக்கியால் சுட்டது பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்ததாக ஓட்டல் ஊழியர்கள் பிரயேஷ் தக்கர், அபய் வாக்மாரே, கிருஷ்ணா ஷெட்டி, நிகில் தக்கர், பாண்டே, அசோக் சிங், இந்திரயான் பாண்ே்ட ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவான ராகேஷ் கர்லாவின் தோழியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்