எலைட் கடைகளில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மது விலை உயர்கிறது: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்கிறது. அதற்காக ஆயத்தீர்வையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை வைத்திருந்தாலும், மதுபான விற்பனையை தமிழக அரசு முழுமையாக கைவிட முடியவில்லை.
ஆனாலும் சில காலகட்டத்தில் படிப்படியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்து 126 மதுபானக் கடைகள் மட்டுமே உள்ளன.
பிராந்தி, விஸ்கி, ஜின், ரம், பீர் ஆகிய மது வகைகளை மதுபானப் பிரியர்கள் விருப்பமுடன் வாங்கி அருந்துகின்றனர். மதுபானத்தைப் பொறுத்தவரை, அதை பழகிவிட்டாலோ அல்லது மதுவுக்கு அடிமையாகிவிட்டாலோ அதன் விலையைப் பற்றி ஏழை முதல் பணக்காரர் வரை கவனத்தில் கொள்வதில்லை.
எனவேதான் மதுவிலை ஏற்றத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருப்பதில்லை. டாஸ்மாக் மதுபானங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இல்லாததால், அதற்கான ஆயத்தீர்வையை வருமானமாக மாநில அரசு பெற்று வருகிறது.
தற்போது, ஐ.எம்.எப்.எல். என்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களில், சாதாரண மதுவுக்கான ஆயத்தீர்வை 56 முதல் 58 சதவீதமாகவும், நடுத்தர மதுவின் ஆயத்தீர்வை 58 முதல் 59 சதவீதமாகவும், உயர்தர மதுவின் ஆயத்தீர்வை 59 முதல் 62 சதவீதமாகவும் உள்ளது.
எலைட் என்ற மதுபானக் கடைகளில் அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை ரூ.1,990-ல் இருந்து ரூ.21,130 வரை உள்ளது.
விஸ்கியில், ஜானிவாக்கர் புளு விலை ரூ.21,130, ரெட் லேபில் ரூ.1,990, பிளாக் லேபில் ரூ.4,030, ஜாக் டேனியல் ரூ.4,980; பிராந்தியில், ரெனு மார்ட்டின் வி.எஸ்.ஓ.பி. விலை ரூ.5,300, ரெனி மார்ட்டின் ஆட்டோ ரூ.20,410, எமிசி கோல்ட் ரூ.4,690; வைனில், ஜேக்கப் பிரின்ஸ் வைன்விலை ரூ.2,960, ஆப்ரிக்கன் கேன் பீர் ரூ.250 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கான ஆயத்தீர்வை 60 முதல் 62 சதவீதமாக உள்ளது.
இந்தநிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடியது. இந்தக் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், வணிக வரித்துறை செயலாளர் பாலச்சந்திரன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிரிலோஷ்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
தமிழக அரசின் நிதி பற்றாக்குறையை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதி மதுக்களுக்கான ஆயத்தீர்வையை அதிகரிப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் 12 சதவீதம் ஆயத்தீர்வையை உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இன்று சட்டசபையில் வணிகவரிகள் துறைக்கான மானியக் கோரிக்கை அலுவல்கள் எடுக்கப்பட உள்ளன. எனவே இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் அல்லது சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை அருகே சியட் என்ற டயர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க அனுமதி கொடுப்பது தொடர்பாகவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.