விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 100 யூனிட் மணல் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி கோறையாறு மற்றும் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியாறு ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் மணல் திருட்டு நடந்து வருகிறது.

Update: 2018-06-27 22:45 GMT
அன்னவாசல்,

இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி கோறையாறு மற்றும் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடியாறு ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இது போன்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் லாரிகள், டிராக்டர்களில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி தனியார் மற்றும் புறம்போக்கு இடங்களில் சிலர் குவித்து வைக்கின்றனர். இந்த நிலையில் இலுப்பூர் அருகே உள்ள வாளதாடிப்பட்டி மற்றும் அன்னவாசல் அருகே உள்ள மயிலாப்பட்டி, குடுமியான்மலை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலுப்பூர் வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி தலைமையிலான அதிகாரிகள் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாளதாடிப்பட்டியில் 5 இடங்களிலும், மயிலாப்பட்டியில் ஒரு இடத்திலும் விற்பனைக்காக மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து அங்கிருந்த மொத்தம் 100 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்