கர்ப்பிணி பெண் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமனார் கைது
மயிலாடுதுறையில், கர்ப்பிணி பெண் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்- மாமனாரை போலீசாரை கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே கோமல் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய தம்பி முத்துகிருஷ்ணனின் மகள் சரண்யா (வயது 29). பட்டதாரி. சரண்யாவின் தந்தையும், தாயும் இறந்து விட்டனர். இதனால் சரண்யாவை, ராஜேந்திரன் வளர்த்து வந்தார். இந்தநிலையில் சரண்யாவுக்கும், மயிலாடுதுறை அறுபத்து மூவர்பேட்டையை சேர்ந்த பாலு மகனும், என்ஜினீயருமான பாலாஜிக்கும் (33) கடந்த 23.3.2015 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. தற்போது சரண்யா கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் சரண்யாவை, அவரது கணவர் பாலாஜி வேலைக்கு செல்லும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பாலாஜி, மாமனார் பாலு, மாமியார் தமிழரசி ஆகிய 3 பேரும் சேர்ந்து சரண்யாவிடம் மேலும் சீர்வரிசை பொருட்கள், பணம் வாங்கி வரும்படி கூறியும் செல்போனில் பெரியப்பா, பெரியம்மாவிடம் பேசக்கூடாது என்றும் கூறி கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதனால் சரண்யா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி சரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரண்யாவின் பெரியப்பா ராஜேந்திரனுக்கு, பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்தசம்பவம் தொடர்பாக சரண்யாவின் பெரியப்பா ராஜேந்திரன் மயிலாடுதுறை உதவி கலெக்டரிடம் தனது வளர்ப்பு மகள் சரண்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார்.
அதன்படி மயிலாடுதுறை போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கை நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் மாற்றம் செய்து சரண்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் பாலாஜி, மாமனார் பாலு (64) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.