சிலை கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுபாஷ் சந்திரகபூர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரகபூர் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Update: 2018-06-27 22:45 GMT
கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இதேபோல் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. விருதுநகர் மாவட்டம் பழுவூர் சிவன்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு 6 ஐம்பொன் சிலைகள் மாயமானது. இந்த 3 வழக்கிலும் தொடர்புடைய சுபாஷ் சந்திரகபூரை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்குகள் கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து போலீசார் சுபாஷ் சந்திரகபூரை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 11-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இதனையடுத்து போலீசார் சுபாஷ் சந்திரகபூரை திருச்சி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்