13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பிறதுறைகள் மூலம் மேற்கொள்ளவேண்டிய அரசு பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தில் திணித்து பணிசுமையை அதிகரிப்பதை கைவிடவேண்டும், தகுதி வாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம்உயர்த்தி அறிவிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் தர்மகுலசிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பகவதியப்பபிள்ளை, சந்திரன், கிறிஸ்டோபர், லீடன் ஸ்டோன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.