தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடலோர காவல்படையினருக்கு மினி மாரத்தான் போட்டி
தூத்துக்குடியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடலோர காவல்படையினருக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை கமாண்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கடலோர காவல்படையினருக்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை கமாண்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
மினி மாரத்தான் போட்டிதூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன. 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5.6 கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் போட்டியும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 கிலோ மீட்டர் நடை போட்டியும் நடந்தது. இந்த போட்டியை கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.
பரிசுஇந்த போட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் தொடங்கி, கடலோர காவல் படை அலுவலகத்தில் முடிவடைந்தது. போட்டியில் ரோந்து கப்பல்களில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கடலோர காவல்படை அலுவலகத்தில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.