‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க மாட்டோம்’ எடியூரப்பா பேட்டி
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் நடந்து வரும் குழப்பங்களை நாங்கள் அமைதியாக கவனிப்போம். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். கூட்டணி குழப்பம் குறித்து அதிகம் பேசாமல் நிலைமையை கவனிக்கும்படி எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க மாட்டோம்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் எதிர்பார்ப்பு என்னவென்றால், கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அந்த திசையில் நாங்கள் எங்கள் கட்சி பணிகளை தொடங்குவோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.