அண்டாப்ஹில்லில் கார்கள் புதைந்த இடத்தில் மீண்டும் நிலச்சரிவு
அண்டாப்ஹில்லில் கார்கள் புதைந்த இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.
மும்பை,
மும்பை அண்டாப்ஹில்லில் லாய்ட்ஸ் எஸ்டேட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் வக்கீல்கள், நீதிபதிகள், தொழில் அதிபர்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் அருகே ஒரு கட்டுமான நிறுவனம் சார்பில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில், நேற்றுமுன் தினம் அதிகாலை கனமழை பெய்து கொண்டிருந்த போது, கட்டுமான பணிகள் நடை பெறும் இடத்தில் கட்டப்பட் டிருந்த பெரிய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு உண்டானது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உருண்டு விழுந்து மண்ணில் புதைந்தன. நிலச்சரிவின் காரணமாக லாய்ட்ஸ் எஸ்டேட் அடுக்குமாடி கட்டிட குடியிருப்புவாசிகள் பீதியில் உறைந்தனர். அங்கு பெரும் பதற்றம் உண்டானது.
நிலச்சரிவை தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியினர் வெளியேற்றினர்.
நிலச்சரிவின் காரணமாக லாய்ட்ஸ் எஸ்டேட் அடுக்குமாடி கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்வி குறியாகி இருக்கிறது. இதையடுத்து, அங்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு மழைக்காலம் முடியும் வரை மாநகராட்சி சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு தடை விதித்தது.
இந்தநிலையில், நேற்று அந்த இடத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இது மேலும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது.