மாட்டுங்கா லேபர்கேம்பில் அடுக்குமாடி கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்தது
மும்பை மாட்டுங்கா லேபர்கேம்பில் லட்சுமி என்ற அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் தமிழர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மும்பை,
மழை பெய்து வரும் நிலையில், நேற்று திடீரென அந்த கட்டிடத்தின் சிலாப் ஒன்று இடிந்து விழுந்தது. மேலும் அந்த கட்டிடத்தில் வசித்து வரும் சிலரது வீட்டின் மேற்பூச்சுகளும் பெயர்ந்து விழுந்தன. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

இருப்பினும் பழுதடைந்த நிலையில் உள்ள அந்த கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் இந்த சம்பவங்களால் பீதி அடைந்து உள்ளனர்.
எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து தரும்படி மகாடாவுக்கு கட்டிட குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.