மலைக்கோட்டை எக்ஸ்பிரசை தொடர்ந்து மேலும் 27 ரெயில்களில் கேப்டன்கள் நியமனம்
மலைக்கோட்டை எக்ஸ்பிரசை தொடர்ந்து மேலும் 27 ரெயில்களில் கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர்.
திருச்சி,
பொதுவாக கப்பல்களில் கேப்டன் என்ற பதவி உண்டு. அதேபோல எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கேப்டன் எனும் பதவி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி-சென்னை இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி கேப்டன் பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. ரெயிலில் குடிநீர் வசதி, மின்விசிறிகள் ஓடாதது, ஏ.சி.பெட்டியில் குளிர்சாதன வசதி குறைவு உள்ளிட்டவை தொடர்பாக கேப்டனிடம் பயணிகள் புகார் தெரிவிக்கலாம்.
கேப்டன் பொறுப்பில் இருக்கும் மூத்த டிக்கெட் பரிசோதகர், பயணிகளின் புகார்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார். மேலும் கேப்டன் பணியில் இருப்பவரின் செல்போன் எண் சார்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். பயணிகள் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
இந்நிலையில் மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் கேப்டன்கள் நியமிக்கப்படுவார்கள் என திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி திருச்சி கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் மேலும் 15 எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும், திருச்சி வழியாக இயக்கப்படும் 12 ரெயில்களிலும் என மொத்தம் 27 ரெயில்களில் கேப்டன் பதவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ள ரெயில்களின் விவரம் வருமாறு:-
காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, தஞ்சாவூர்-சென்னை உழவன் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி- சென்னை மன்னை எக்ஸ்பிரஸ், காரைக்கால்- சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தி, விழுப்புரம்-கராக்பூர், விழுப்புரம்- புருலீயா, விழுப்புரம்-ஹவுரா, புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (விழுப்புரம், விருத்தாசலம் வழி), புதுச்சேரி-தாதர் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி-மங்களூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (விழுப்புரம், திருச்சி வழியாக), திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி-கோவா வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல திருச்சி வழியாக கடந்து செல்லும் மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-மாண்டியா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ், மதுரை-லோக்மான்யதிலக் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-உத்தரபிரதேச மாநிலம் பைசலாபாத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களிலும் கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து நேற்று மாலை ஹவுராவுக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் மூத்த டிக்கெட் பரிசோதகர் சங்கர் கேப்டன் பணியில் இருந்தார். அவரிடம் பயணிகள் சிலர் குறைகளை தெரிவித்தனர். அதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தார். திருச்சி வழியாக கடந்து செல்லக்கூடிய 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நியமிக்கப்பட்டுள்ள கேப்டன்கள், திருச்சியில் இருந்து பணியை தொடங்குவார்கள் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.