மினி லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது; 6 பெண்கள் உடல் நசுங்கி பலி
குமாரபாளையம் அருகே மினிலாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். மில் வேலைக்கு சென்ற போது இந்த துயர சம்பவம் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இந்த நூற்பாலைகளில் வேலை பார்ப்பதற்காக குமாரபாளையம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேன்கள் மூலம் சென்று வருவது வழக்கம்.
இந்த வகையில் நேற்று வெப்படையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்டோர் வேனில் குமாரபாளையத்தில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டனர். வேனை குமாரபாளையத்தை சேர்ந்த கவுதம்(வயது 26) என்பவர் ஓட்டினார். அந்த வேன் வெப்படையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
காவடியான்காடு என்ற இடத்தில் மதியம் 1.30 மணியளவில் வேன் சென்ற போது திடீரென்று டிரைவர் கவுதமின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக வேன் ஓடியது. அப்போது எதிரே வந்த ஒரு மினிலாரி மீது மோதி வேன் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த தொழிலாளர்கள் அய்யோ... அம்மா... என்று அலறினார்கள்.
மோதிய வேகத்தில் மினிலாரியின் முன்பாகம் நொறுங்கியது. கவிழ்ந்த வேனில் இடிபாடுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் கூக்குரல் எழுப்பினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு கவிழ்ந்த வேனுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலியானார்கள். பின்னர் காயம் அடைந்த வேன் டிரைவர் கவுதம் உள்பட 13 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பலியானார். மாரியம்மாள், பெருமாயி ஆகிய 2 பெண்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பலியானார்கள். இதை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. விபத்தில் பலியான பெண்கள் விவரம் வருமாறு:-
சடையம்பாளையம், காந்திநகரை சேர்ந்த பொன்னுசாமி மனைவி அய்யம்மாள்(60), சடையம்பாளையம் வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜ் மனைவி சந்திரம்மாள்(63), முருகன் மனைவி கற்பகம்(52), பழனிசாமி மனைவி மாரியம்மாள்(40), நஞ்சப்பன் மனைவி பெருமாயி(55) வேம்மங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த குமாரசாமி மனைவி வள்ளியம்மாள்(52).
மேலும் இந்த விபத்தில் குமாரபாளையத்தை சேர்ந்த சுப்பாயம்மாள்(56), ஆண்டிசாமி(60), மாதேஸ்வரி(40), அலமேலு(55), அன்னபூரணி(50), சக்திவேல்(34), இன்னொரு சக்திவேல்(25), மாதேஸ்(35), லட்சுமி(61), டிரைவர் கவுதம்(26) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 10 பேரும் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மில் வேலைக்கு சென்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு 6 பெண்கள் பலியான துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.