நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைத்தளம் கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்

நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைத் தளத்தை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.;

Update: 2018-06-26 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தகவலியல் மையம் மூலம், பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைத்தளத்தை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் https://pe-r-a-m-b-a-lur.nic.in vd;w என்ற நவீன தகவல் தொழில்நுட்ப மாவட்ட வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங் களையும் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் போன், டேப்ளட், மடிக்கணினி, கணினி உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் மாவட்டத்தின் அனைத்து அரசுத்துறைகளின் விவரங்களும், செயல்பாடுகளும் இந்த வலைத்தளத்தின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த வலைத்தளம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அரசுத்துறைகளின் விவரங்களுடன், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் வலைத்தளம் விதிமுறைகளை 100 சதவீதம் முழுமையாக பின்பற்றி புதிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணையதள பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வலைத் தளம் உருவாக்கப்பட் டுள்ளது.

மேலும், பெரம்பலூர் மாவட்டம் குறித்து அனைத்து விதமான பொது தகவல்கள், வருவாய்த்துறை, சுற்றுலா துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான அரசு துறையின் சேவைகளையும், விவரங்களையும் தெரிந்துகொண்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், முக்கிய இடங்களின் புகைப்படங் களும் இடம்பெற்றுள்ளன. இந்த வலைத்தளத்தில் தினமும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வெளி யிடப்படும் மாவட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப் படங்களை காண முடியும்.

அரசின் திட்டங்களை தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் காலவிரயத்தைத் தவிர்க்கும் வகையில் அரசு திட்டங்கள் குறித்தும் அவற்றை பயன் படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதை வலைத்தளத்தில் பார்க்கலாம். இப்புதிய தொழில்நுட்ப வலைத்தளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் சாந்தா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட தேசிய தக வலியல் அதிகாரி வெங்கட கிருஷ்ணன், மாவட்ட கூடுதல் தகவலியல் அதிகாரி கண்ணன், மின் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்