அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர்கள் கைது, மது விற்றவரும் சிக்கினார்
தாயில்பட்டி அருகிலுள்ள கலைஞர் காலனியில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்ததாக சின்ன கருப்பசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகிலுள்ள கலைஞர் காலனியில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்ததாக சின்ன கருப்பசாமி (வயது45) என்பவரை வெம்பக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கைது செய்தார். வீட்டில் 10 பெட்டிகளில் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல கணஞ்சாம்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவரது வீட்டில் இருந்து 10 கிலோ சரவெடி கைப்பற்றப்பட்டது. அவர் கைதானார். அதே கிராமத்தில் பதுக்கி வைத்து மதுவிற்ற மணி (50) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.