போலி நகைகளை அடகுவைத்து ரூ.55¼ லட்சம் மோசடி தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

மதுரையில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.55¼ லட்சம் மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.;

Update: 2018-06-26 22:30 GMT

மதுரை,

மதுரை தெற்கு வெளிவீதியில் தனியார் வங்கியின் வட்டார வளர்ச்சி மேலாளர் மணிகுமார் (வயது 35) தெற்குவாசல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:–

இந்த வங்கியில் பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த சிவா(வயது 38) என்பவர் கிளை மேலாளராக இருந்தார். அப்போது அவர் 331 பவுன் போலி நகைகளை பல்வேறு பெயர்களில் போலியான ஆவணங்கள் தயாரித்து வங்கியில் அடகு வைத்து ரூ.55 லட்சத்து 24 ஆயிரத்து 250 பெற்றுள்ளார். இது வங்கியில் தணிக்கை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வங்கி ஊழியர்கள் தினேஷ்(25), சுமித்தா(37) ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வங்கி மேலாளர் சிவா உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்