திருமானூரில் பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

அரியலூர் மாவட்டம், திருமானூரில் பஸ் நிலையம் அமைக்க கோரி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சேவை இயக்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2018-06-26 22:15 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் பஸ் நிலையம் அமைக்க கோரி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சேவை இயக்கம் மற்றும் விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று இழுத்து மூடும் போராட்டத்தை, மக்கள் சேவை இயக்கம், விவசாய சங்கம், சமூக ஆர்வலர்கள் சார்பில் நடத்துவதாக இருந்தது. ஆனால் 12.30 மணி வரை அலுவலகத்திற்கு பொறுப் பாளர்கள் யாரும் வராததால் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் அந்த போராட்டம் மனு கொடுக்கும் போராட்டமாக மாற்றப்பட்டது. இதையடுத்து திருமானூரில் பஸ் நிலையம் அமைக்க கோரி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசனிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன், மக்கள் சேவை இயக்க பொருளாளர் வரதராஜன் மற்றும் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்