9 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் பெற்றோருடன் கைது
9 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் பெற்றோருடன் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை லால்பகதூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவருடைய மகன் ராஜா(30). கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே நற்கந்தன்குடி வசப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த நீலமேகம் மகள் அனுசுயா (26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜா, காரைக்காலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அனுசுயா, பொறையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ராஜாவும் அனுசுயாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கைது
கல்லூரி படிப்பு முடிந்ததும் அனுசுயாவுக்கும், ராஜாவுக்கும் சென்னையில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டனர். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சென்னையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ராஜாவுக்கு திருமணம் செய்ய
பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுசுயா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜாவிடம் கேட்டார். இதற்கு ராஜா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த அனுசுயா, திருமண ஆசைவார்த்தை கூறி கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து ஏமாற்றியதாக ராஜா மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ராஜா, அவருடைய தந்தை ராமச்சந்திரன், தாய் சித்ராதேவி (50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.