காதல் மனைவியுடன் தகராறு: தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் விஷ ஊசி போட்டு தற்கொலை
சேலம் கொண்டலாம்பட்டியில் காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கொண்டலாம்பட்டி,
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 28). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த சென்னீஸ்மேரி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிதினி (3½) என்ற பெண் குழந்தையும், மிதுன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
பார்த்திபன் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அரியானூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பார்த்திபன் மன உளைச்சல் அடைந்து காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி, கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் அன்று இரவு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த மாரடைப்பு நோயாளிக்கு பயன்படுத்தும் மருந்தை ஊசியில் ஏற்றி தனது உடலில் போட்டுக்கொண்டு மயங்கி விழுந்தார்.
இயல்பாக இருக்கும் ஒருவர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் அது விஷமாக மாறி விடும் என்பதால், விஷ ஊசியாக அவர் போட்டுக்கொண்டு மயங்கி விழுந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இறந்த பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.