பள்ளியை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அவதி கலெக்டரிடம் மாணவர்கள் மனு
தாரமங்கலம் அருகே பள்ளியை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அவதிப்பட்டு வருவதாகவும், அதை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.;
சேலம்,
தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி ராஜானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ரோகிணியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அமரகுந்தி ஊராட்சிக்கு உட்பட்ட தொளசம்பட்டி ராஜானூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் எப்போதும் தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் பள்ளியை சூழ்ந்துவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். பள்ளிக்கூடம் அருகில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு கழிவுநீரை அகற்றவும், பள்ளிக்கூடம் முன்பு சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமலூர் அருகே வெள்ளாளபுரம் கரட்டூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55). விவசாயி. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில், ஓமலூர் அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் 30 சென்ட் நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசில் புகார் செய்தோம். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது. இருப்பினும் நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதுபற்றி அவர்களிடம் கேட்டால், கொலை செய்துவிடுவதாக மிரட்டு கிறார்கள். எனவே, நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.