‘செக்’ மோசடி வழக்கில் டாக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் கோர்ட்டில் தீர்ப்பு

‘செக்’ மோசடி வழக்கில் டாக்டருக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2018-06-25 22:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் ராஜேந்திரன்(வயது 65). இவர், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். தான் வாங்கிய கடனுக்காக ரூ.12 லட்சத்துக்கு டாக்டர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியனுக்கு செக் கொடுத்துள்ளார்.

அந்த செக்கை பாலசுப்பிரமணியன் வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் டாக்டர் ராஜேந்திரன் மீது பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

டாக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்

வழக்கை விசாரித்த படடுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.12 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். பின்னர் டாக்டர் ராஜேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்