காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை மீண்டும் தொடங்கியது
வேலூருக்கு வருகை தருகின்ற ரெயில் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கியது.
காட்பாடி
காட்பாடி ரெயில் நிலையத்தில் தொடங்கி 3 நாட்களில் நிறுத்தப்பட்ட பிரீபெய்டு ஆட்டோ சேவை மீண்டும் நேற்று தொடங்கியது. அதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காட்பாடி ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா, மருத்துவம், படிப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக வேலூருக்கு வருகை தருகின்றனர். ரெயில் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதையடுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கியது. ரெயில் பயணிகள் மத்தியில் பிரீபெய்டு ஆட்டோ சேவை வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, பயணிகளை ஏற்றி செல்வதில் பிரீபெய்டு சேவை ஆட்டோ டிரைவர்களுடன், பிரீபெய்டு சேவையில் இல்லாத ஆட்டோ டிரைவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை ரெயில் நிலைய வளாகத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்ட 3 நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் ரெயில் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், காட்பாடி போலீசார் ஆகியோர் ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் பிரீபெய்டு ஆட்டோ சேவை முடங்கியது. இதனால் அவதியடைந்த பயணிகள் மீண்டும் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட பிரீபெய்டு ஆட்டோ சேவை மீண்டும் தொடங்கியது.
பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் அனைத்தும் ரெயில்வே விதிமுறைகளை பின்பற்றி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமீறும் ஆட்டோக்கள் ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதியில் நிறுத்திவைப்பதற்கு தடை விதிக்கப்படும் என ரெயில் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கியுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.