பொய் வழக்கு போட்டதாக கூறி காவல்நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் கைது
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட சமூக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் உள்நோக்கத்தோடு பொய் வழக்கு போட்டுள்ளதாக சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த வழக்கினை திரும்பப் பெறக்கோரி ஒதியஞ்சாலை காவல்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று தாவரவியல் பூங்கா அருகே அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து ஒதியஞ்சாலை காவல்நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் அண்ணாசிலை சிக்னல் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதையும் மீறி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த உளவாய்க்கால் சந்திரசேகரன், பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் இளங்கோ, தமிழர் களம் அழகர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர் உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் கரிக் குடோனில் சிறிது நேரம் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.