டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் - ரூ.35 ஆயிரம் கொள்ளை
தஞ்சையில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். உறவினரின் திருமணத்திற்கு சென்றபோது கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெட்டிப்பாளையம் ரோடு கே.வி.என். நகரை சேர்ந்தவர் கொத்துபுதீன் (வயது 54). திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர், திருச்சியில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கதவை அடுத்து இருந்த மரக்கதவும் திறந்து கிடந்தது. இதனால் அவர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் அறையில் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரத்தையும் காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த அகன்ற திரையுடன் கூடிய 3 டி.வி.க்களையும் காணவில்லை. உறவினரின் திருமணத்திற்கு கொத்துபுதீன் தனது குடும்பத்தினருடன் சென்று விட்டதையும், வீட்டில் யாரும் இல்லை என்பதையும் அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம், டி.வி.க்களை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை கொத்துபுதீன் பார்வையிட்டார். கேமராவில் வீட்டிற்குள் 2 நபர்கள் நடமாடுவதும், வெளியே ஒருவர் நிற்பதும் பதிவாகி இருந்தது. 5 நிமிடத்திற்கு பிறகே கண்காணிப்பு கேமரா வீட்டிற்குள் பொருத்தப்பட்டு இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அந்த கேமராவை மேல்நோக்கி திருப்பி வைத்து விட்டனர். இதனால் அதன் பிறகு கேமராவில் மர்ம நபர்களை பற்றிய தகவல் பதிவாகவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு கொத்துபுதீன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மதுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளை போன நகைகள், டி.வி.க்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.