சாலையோரம் நிறுத்தி இருந்த 6 கார்கள் தீயில் எரிந்து நாசம் தொழில் போட்டியால் சதியா? போலீசார் விசாரணை
திருச்சி பீமநகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள் தீயில் எரிந்து நாசமானது. தொழில் போட்டியால் யாரேனும் செய்த சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் ‘ஞானம் கார் கேர்’ என்ற பெயரில் கார் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருபவர் கோபால் (வயது 42). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கார்களை பழுது பார்ப்பது மட்டுமல்லாது, பழைய கார்களை ‘டிங்கரிங்’ செய்வது மற்றும் பெயிண்ட் அடித்து புதியதுபோல தயார் செய்து அதன் உரிமையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம்.
கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் அவரது பட்டறைக்கு பழுது பார்ப்பதற்காக வந்தன. அவற்றில் 2 இன்டிகா, 1 இன்டிகோ, 2 மாருதி-800 மற்றும் ஒரு போர்டு ஐகான் என 6 கார்களை பட்டறைக்கு வெளியே சாலையோரம் நிறுத்தி இருந்தார். அந்த இடத்தில் ஒரு வேப்பமரத்தின் கீழ் குப்பைகள் ஒரு இடத்தில் தேங்கி கிடந்தது. அத்துடன் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பட்டறைக்கு மேலே மின்சார கம்பிகளும் சென்றன. நேற்று முன்தினம் வேலைமுடிந்து இரவு கோபால் பட்டறையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பட்டறைக்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்களும் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கின. அதிகாலை நேரம் என்பதால் அப்போது ஆட்கள் நடமாட்டமும் இல்லை. அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
கார்களில் பிடித்த தீ, அருகில் உள்ள வேப்பமரத்திலும் பற்றி எரிய தொடங்கியது. அப்போது அத்தெருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்த ஒருவர், கார்கள் தீப்பிடித்து எரிவதை கண்டதும் அருகில் உள்ள கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், அவற்றில் 3 கார்கள் முழுமையாக் எரிந்து எலும்புக்கூடு போல் ஆயின. 3 கார்கள் பகுதி அளவில் எரிந்து நாசமாயின. இதன் சேத மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் என கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதிகாலையில் அடித்த காற்றால், மின்வயர் அருகில் செல்லும் மரத்தில் உரசி தீப்பிடித்திருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட தீப்பொறி கீழே கிடந்த குப்பையில் பிடித்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களிலும் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் அருகில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் உள்ள பதிவுகளை வைத்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்றும், அல்லது கார் பட்டறை தொழில் போட்டியால் யாரேனும் அதிகாலை வேளையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைத்து சென்றிருக்கலாமோ? என்ற கோணத்திலும் செசன்சு கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.