20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர், கிளனர் பலி மாற்று டிரைவர் படுகாயம்
தேன்கனிக்கோட்டை அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர், கிளனர் பலியாகினர். மாற்று டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டிக்கு ஜல்லிக்கலவை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரியை ஒடிசாவை சேர்ந்த ஜான்சன் (வயது 30) என்பவர் ஓட்டி சென்றார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம்தேவ் மண்டல் (24) என்பவர் கிளனராகவும், மதுரையை சேர்ந்த முனியாண்டி (54) என்ற மாற்று டிரைவரும் உடன் சென்றனர்.
இந்த லாரி அஞ்செட்டி அருகே உள்ள கொண்டை ஊசி வளைவில் சென்ற போது எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் ஜான்சன் திருப்பி உள்ளார். அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. அப்போது மலைப்பாதையில் இருந்த மரங்களில் லாரி சிக்கி அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர் ஜான்சன், கிளனர் ராம்தேவ் மண்டல், மாற்று டிரைவர் முனியாண்டி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர்.
இதில் கிளனர் ராம்தேவ் மண்டல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த ஜான்சன், முனியாண்டி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி டிரைவர் ஜான்சன் பரிதாபமாக இறந்தார். மாற்று டிரைவர் முனியாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கிளனர் ராம்தேவ் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.