மலையில் மரங்களை வெட்டி கடத்துவதாக புகார் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 8 பேர் கைது
கோட்டைகரடு மலையில் மரங்களை வெட்டி சிலர் சட்டவிரோதமாக கடத்துவதாகக்கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 25), ராஜ்குமார், ஆனந்த், ரகுமான், அஜித்குமார், பிரகாஷ், முத்துசாமி, திருநாவுக்கரசு ஆகிய 8 பேர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று திடீரென மண்எண்ணெயை தங்களுடைய உடல்களில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவர்களுடைய தலையில் தண்ணீரை ஊற்றி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினர்.
அப்போது, நாழிக்கல்பட்டி பகுதியில் கோட்டைகரடு மலையில் உள்ள பலவகையான மரங்கள் மற்றும் செம்மண்ணை சிலர் வெட்டி கடத்துவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்காமல், தொடர்ந்து கோஷங் களை எழுப்பியதால் தீக்குளிக்க முயன்ற 8 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இது தொடர்பாக தீக்குளிக்க முயன்றவர்கள் கூறியதாவது:-
நாழிக்கல்பட்டி காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகில் கோட்டைகரடு மலை உள்ளது. இந்த மலைப்பகுதி வனத்துறையின் பாதுகாப்பிலும், தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. மலையை சுற்றி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலமும், மலைப்பகுதியில் வேப்பமரம், பனைமரம், புங்கை மரம் போன்ற பலவகை மரங்கள் உள்ளன.
இந்தநிலையில், அரசுக்கு சொந்தமான மரங்களை சிலர் சட்டவிரோதமாக வெட்டி கடத்தியும், மலையில் உள்ள செம்மண்ணை அள்ளி விற்பனை செய்தும் வருகிறார்கள். தினமும் டிப்பர் லாரிகளில் டன் கணக்கில் செம்மண் வெட்டி கடத்தப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டால், எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு சொந்தமான மலையில் உள்ள மரங்களையும், செம்மண்ணையும் வெட்டி கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றோம். எனவே, சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 8 பேரையும் போலீசார் வேனில் ஏற்றி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மலையில் மரங்கள் மற்றும் செம்மண்ணை வெட்டி கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 8 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.