ஊத்துக்கோட்டையில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதை கண்டித்து குவாரி முற்றுகை
ஆரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதை கண்டித்து கடை அடைப்பு போராட்டம், மறியல் போராட்டம் போன்றவை நடந்தது.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டனர்.
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு ஆரணி ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் இந்த ஆற்றை நம்பி உள்ளன. தமிழக அரசு இந்த ஆற்றில் கடந்த 1-ந் தேதி மணல் குவாரி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை அடைப்பு போராட்டம், மறியல் போராட்டம் போன்றவை நடந்தது.
இந்த நிலையில் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குவாரியை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு வட்ட செயலாளர் ஏ.ஜி. கண்ணன் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் வேலன், கண்ணியப்பன், வாசுதேவன், மணிகண்டன், கிளைச்செயலாளர்கள் திருப்பதி, ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தகவல் அறிந்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிசந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாக குறிப்பிட்டிருந்தனர். இத குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தாசில்தார் ரவிசந்திரன் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் மணல் குவாரியை மூட வலியுறுத்தி வரும் 30-ந் தேதி ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவு செய்துள்ளளர்.
குவாரி தொடங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீக்குளிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஊத்துக்கோட்டையில் குவிக்கப்பட்டிருந்தனர்.