ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருவாலங்காடு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த ஜெ.எஸ்.ராமாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சக்திவேல், மகள் மகாலட்சுமி. இவர்களில் சக்திவேல் 9–ம் வகுப்பும், மகாலட்சுமி 7–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு சரவணன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்கள் திடீரென குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். சரவணன், அவரது மனைவி சுதா, மகன் சக்திவேல், மகள் மகாலட்சுமி ஆகியோர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினர்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு அரக்கோணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரவணன், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ரமேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணம் கொடுத்த ரமேசுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேஷ், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அவமானம் அடைந்த சரவணன் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.