இசைப் பிரியர்களுக்கான பாட்காஸ்ட்

பாட்காஸ்ட் எனும் புதிய அப்ளிகேசனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2018-06-25 08:11 GMT
கூகுள் நிறுவனம் பிரைம் என்ற பெயரில் உலக அளவில் சினிமாக்களை பார்க்கும் வசதியை வழங்குவதைப்போல, பாடல்களுக்கும் உலக அளவில் சேவை வழங்குவதற்காக பாட்காஸ்ட் எனும் புதிய அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே பிளே மியூசிக் என்ற அப்ளிகேசன் இதுபோன்ற சேவையை வழங்கினாலும் மேலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்திருக்கிறது பாட்காஸ்ட். இது தங்கள் இசையை வெளியிட விரும்புபவர்களுக்கான தளமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை அறிவு தொழில்நுட்பத்துடன் புதிய இசைக்கோர்வை உருவாக்கவும் இது பயன்படும். 

மேலும் செய்திகள்