தகிசரில் ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி இளம்பெண் படுகாயம்
தகிசரில் ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
மும்பை,
தகிசரில் ஜீப் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.
விபத்து
மும்பை தகிசர் பகுதியில் சம்பவத்தன்று ஒரு மோட்டார ்சைக்கிளில் இளம்பெண் உள்பட 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்ைட இழந்த மோட்டார் சைக்கிள் அந்த வழியாக வந்த ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
2 போ் பலி
டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இரண்டு பேர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த இளம்பெண் தீவிர சிகிச்ைச பிரிவில் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் பலியானவர் கள் பெயர் ஜித்தேந்திரா, அவரது நண்பர் அமித் உபாத்யாய் என்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.