கடந்த முறை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும்

கடந்த முறை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் பொதுக்கூட்டத்தில் பழ.கருப்பையா பேச்சு

Update: 2018-06-24 22:30 GMT
திருச்சி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் அருகே உறையூர் பகுதி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடியில் காடு, மலை, விவசாய நிலங்களை அழித்து கொண்டு வர வேண்டுமா?. நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க. தான் தூண்டிவிடுகிறது. கடந்த தேர்தலில் 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியை தழுவியது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வீறு கொண்டு எழுந்து வெற்றி பெறும், என்றார். கூட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் விஜயாஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்