வாலாஜா அருகே வாகனம் மோதி மாற்றுத்திறனாளி சாவு

நேற்று அம்மூர் ரோட்டில் சென்ற குணசேகர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணசேகர் மீது மோதியது.

Update: 2018-06-24 22:15 GMT
வாலாஜா,

வாலாஜா தக்கிடி முத்தியாலு தெருவை சேர்ந்தவர் குணசேகர் (வயது 48). இவரால் நடக்க முடியாததால் சிறிய சக்கரங்கள் பொருத்திய சிறு பலகையின் மீது அமர்ந்து அதனை தள்ளியபடி சென்று வருவார். இந்த நிலையில் நேற்று அம்மூர் ரோட்டில் சென்ற குணசேகர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணசேகர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.

இதுகுறித்து வாலாஜா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

மேலும் செய்திகள்