மாணவர்களின் கல்விக்கட்டணம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக காரைக்கால் கல்லூரி அதிகாரி கைது
மாணவர்கள் கல்விக்கட்டணம் ரூ.8 லட்சத்தை மோசடி செய்ததாக தனியார் கலைக்கல்லூரி அதிகாரியை கோட்டுச்சேரி போலீசார் நேற்று கைது செய்தனர்.;
காரைக்கால்,
காரைக்கால் காளிக்குப்பம் கிராமத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராமசாமி (வயது 48) இவர், கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணங்களை வசூல் செய்து, அதற்கான ரசீதை வழங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை ராமசாமி கல்லூரியில் கட்டவில்லையென கூறப்படுகிறது. இதனை அறியாத கல்லூரி நிர்வாகம், கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது.
அதைத் தொடர்ந்து மாணவர்கள் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை கல்லூரி நிர்வாகத்தினரிடம் சமர்ப்பித்து சான்றிதழை பெற்று சென்றனர்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதில் ராமசாமி, மாணவர்களிடம் வசூலித்த கல்வி கட்டணங்களை முறையாக கல்லூரியில் செலுத்தாமல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அந்த வகையில் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமசாமியை, கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. மேலும், இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராமசாமியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் தேடப்பட்டு வந்த ராமசாமி காரைக்கால் திருவேட்டக்குடி பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் ராமசாமியை கைது செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.