டாக்டர் வீட்டில் 27 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது
வேலூர் காகிதப்பட்டறையில் டாக்டர் வீட்டில் 27 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் தீபக்செல்வராஜ் (வயது 48). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அதே மருத்துவமனையில் அவரது மனைவி தேவமணியும் (43) டாக்டராக உள்ளார். இவர்கள் வீட்டில் விருப்பாட்சிபுரம் காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி மகாலட்சுமி (35) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
தீபக்செல்வராஜ் வீட்டில் அடிக்கடி நகை, பணம் காணாமல் போய் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் பீரோவில் இருந்த பணத்தை மகாலட்சுமி திருடியதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த தேவமணி வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில், எனது வீட்டில் அடிக்கடி நகைகள் காணாமல் போனது. இதுவரை 27 பவுன் வரை திருட்டு போய் உள்ளது. மகாலட்சுமி மீது சந்தேகம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தேவமணி, தீபக்செல்வராஜ் ஆகியோர் வேலைக்கு சென்றவுடன் மகாலட்சுமி வீட்டில் உள்ள நகைகளை சிறிது, சிறிதாக சுமார் 27 பவுன் நகைகளை திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
திருடப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.