குற்றாலத்தில் கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வியாபாரி ஆஸ்பத்திரியில் சாவு

குற்றாலத்தில் கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வியாபாரி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.;

Update:2018-06-25 02:30 IST

நெல்லை, 

குற்றாலத்தில் கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வியாபாரி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

வி‌ஷம் குடித்தனர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் கேரளாவிற்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். சுதாகருக்கும், ஆலங்குளம் பரம்பு பகுதியை சேர்ந்த பொன்ஏஞ்சல் (45) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பொன்ஏஞ்சலுக்கும் திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர்.

சுதாகர், பொன்ஏஞ்சல் கள்ளக்காதல் இரு வீட்டுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த 20–ந் தேதி குற்றாலத்தில் அறை எடுத்து தங்கி இருவரும் அங்கு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ஏஞ்சல் பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சுதாகரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்