கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்ததாக கூறி நாம் தமிழர் கட்சியினர் லாரிகளை மறித்ததால் பரபரப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்ததாக கூறி நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு நேரத்தில் லாரிகளை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா நாடுகாணி கேரள எல்லையில் அமைந்து உள்ளது. இங்கு தமிழக போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவில் இருந்து 2 சரக்கு லாரிகள் நாடுகாணி சோதனைச்சாவடிக்கு வந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்வதாக டிரைவர்கள் தெரிவித்தனர். அப்போது அப் பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கேரளாவில் உள்ள மருத்துவக்கழிவுகளை கூடலூர் பகுதியில் கொட்டுவதற்காக சரக்கு லாரிகள் வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் லாரிகளை தமிழக பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என கூறி வழி மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு நின்றிருந்த போலீசார் நாம் தமிழர் கட்சியினரை கலைந்து செல்லுமாறு கூறினர்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை போலீசார் சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் நாடுகாணி பகுதி மக்களும் அங்கு வந்து லாரிகளில் மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே போலீசார் சோதனை நடத்த வேண்டும் என கூறினர். ஆனால் போலீசார் மறுத்து விட்டனர். அப்போது லாரிகளில் இருந்த டிரைவர்கள் இரவு கூடலூரில் தங்கிவிட்டு காலையில் கர்நாடகாவுக்கு செல்வதாக கூறினர்.
இதனை நாம் தமிழர் கட்சியினர் ஏற்கவில்லை. முறையாக சோதனை நடத்தினால் மட்டுமே லாரிகளில் மருத்துவக்கழிவுகள் இருப்பது தெரியவரும் என நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இவ்வாறு மாநில எல்லையில் 2 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பும். பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் இரவு 1 மணிக்கு 2 லாரிகளையும் தேவாலா போலீசார் திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து லாரிகள் வந்த வழியாக திரும்பி மீண்டும் கேரளாவுக்கு சென்றது. அதன்பின்னரே நாம் தமிழர் கட்சியினரும், கிராம மக்களும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கேதீசுவரன், செய்தி தொடர்பாளர் அரிகிருஷ்ணன், நகர செயலாளர் அமித்கான், தொகுதி செயலாளர் சரவணபவன், ஒன்றிய இணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் கூறியதாவது:- தேவாலா நீர்மட்டம், கீழ்நாடுகாணி பகுதியில் கேரள பகுதியில் உள்ள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை பிடித்து சோதனை செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினோம். ஆனால் போலீசார் எந்த சோதனையும் செய்யாமல் 2 லாரிகளையும் திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.
மருத்துவக்கழிவுகளை கூடலூர் பகுதியில் கொட்டுவதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து கண்காணித்து கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.