பெங்களூருவில் இருந்து பெரம்பலூருக்கு 1,610 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்தன
பெங்களூருவில் இருந்து பெரம்பலூருக்கு 1,610 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன.
பெரம்பலூர்,
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து 1,610 வாக்குப்பதிவு எந்திரங்களை பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மனோகரன், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஷாஜகான் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் லாரி மூலம் நேற்று காலை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். லாரிகளில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் பத்திரமாக இறக்கினர்.
இதையடுத்து அந்த வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை சரி பார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் மற்றும் தாசில்தார்கள் உடனிருந்தனர்.