கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு அமைச்சர், எம்.பி. மரியாதை

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அமைச்சர், எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-06-24 21:45 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கண்ணதாசன் மகள் விசாலாட்சி, முன்னாள் நகரசபை தலைவர் கற்பகம் இளங்கோ, டாக்டர் சுரேந்திரன் மற்றும் பலர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:- மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 9 மாவட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும். எய்ம்ஸ் மருத்துவமனையை போராடி தமிழக அரசு பெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது செந்தில்நாதன் எம்.பி. கூறியதாவது:- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரெயில் வசதி ஏற்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயங்கவும், காரைக்குடி- பட்டுக்கோட்டை அகலரெயில் பாதையில் உடனடியாக ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்