ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ரெயில்களில் எலிகள் தொல்லை, பயணிகள் புகார்
ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ரெயில்களில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.;
பரமக்குடி,
பரமக்குடி ரெயில் நிலையம் தினமும் அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கும் ரெயில் நிலையம் ஆகும். வியாபாரிகள், வணிகர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் அதிகஅளவில் இங்கிருந்து தான் ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதுதவிர மதுரை, திருச்சி, சென்னை, கும்பகோணம், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அவ்வாறு செல்லும் பயணிகள் பிரியாணி, மட்டன், சிக்கன், முட்டை போன்ற அசைவ உணவுகள், சம்சா, வடை உள்ளிட்ட கார வகைகள், இனிப்புகள் போன்றவற்றை எடுத்துச்சென்று ரெயிலில் வைத்து சாப்பிடுகின்றனர். பயணிகள் சாப்பிடும்போது சிதறும் உணவுகளை சுத்தம் செய்யாமல் விடுவதால் அவை ரெயில் பெட்டிகளுக்குஉள்ளேயே கிடக்கின்றன.
அவற்றை சாப்பிட எலிகளும், கரப்பான் பூச்சிகளும் ரெயில் பெட்டிகளில் ஏறிவிடுகின்றன. பயணிகள் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து எலிகளும், கரப்பான் பூச்சிகளும் பேக்குகள், பைகளுக்குள் நுழைந்து அதில் இருக்கும் உடைகள், பொருட்கள் போன்றவற்றை கடித்து குதறி நாசமாக்கி விடுகின்றன. இதனால் பயணிகள் தூக்கமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக இந்த எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தொல்லையானது ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ரெயில்களில் தான் உள்ளதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் இதற்கு காரணம் அதிகஅளவில் அசைவ பிரியர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தான் உணவுகளையும், நொறுக்கு தீனிகளையும், தின்பண்டங்களையும் கொண்டு செல்கின்றனர் என ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
3 மாதத்திற்கு ஒருமுறை ரெயில் பெட்டிகளில் பூச்சி மருந்து அடித்தாலும் அவைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகின்றனர். ரெயில் பயணிகள் இதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே இவற்றை ஒழிக்க முடியும்.