அவினாசியில் 3,020 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல்
அவினாசியில் உரிமம் பெறாமல் போலி லேபிள்கள் ஒட்டப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 3,020 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பறிமுதல் செய்தனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயராஜா, நீலமேகம் ஆகியோர் அவினாசி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு குடோனில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ராஜூ என்பவரது மகன் சிவானந்தம் (வயது 48) என்பவர் அதிகளவிலான எண்ணெய் பாக்கெட்டுகளில் போலி லேபிள்கள் ஒட்டப்பட்ட நிலையில் வைத்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006-க்கு முரணாக சந்தேகப்படும்படி ஜோதி கடலை எண்ணெய் பாக்கெட்டில் பருத்தி எண்ணெய் 80 சதவீதம், கடலை எண்ணெய் 20 சதவீதமும் கலப்படம் செய்து இருப்பதும், விக்னேஷ் நல்லெண்ணெய் பாக்கெட்டில் தவிட்டு எண்ணெயும், சிவகணபதி சமையல் எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலும், ஹெல்த் கோல்டு ரீபைண்டு எண்ணெய் பாக்கெட்டில் பேச் நம்பர் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு இருந்த 3,020 லிட்டர் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
மேலும் 2 எண்ணெய் பாக்கெட்டுகளில் உரிமம் பெறாத போலி முகவரியுடன் கூடிய லேபிள்கள் ஒட்டப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இந்த எண்ணெய் பாக்கெட்டுகள் அனைத்தும் சிவானந்தத்தின் குடோனில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இந்த எண்ணெய் வகைகள் உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உணவு பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், சிவானந்தம் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற போலி எண்ணெய்கள் விற்பனை செய்யும் சில்லரை மற்றும் மொத்த வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உணவு பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து நுகர்வோர் புகார்கள் தெரிவிக்க 94440 42328 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.