பெண்களை சாதிக்கத் தூண்டும் தையல் ஆசிரியை
பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். உடுத்தும் உடையிலும் அழகிய டிசைன்களை எதிர்பார்ப்பார்கள்.
பெண்களின் விருப்பங்களுக்கு தீனி போடும் வகையில் தையல் கலையில் புதுமைகள் புகுந்து கொண்டே இருக்கின்றன. இளம் தையல்கலைஞர்களின் கைவண்ணத்தில் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு சவால் விடும் வகையில் தையல் கலையில் அசத்திக் கொண்டிருக்கிறார், பத்மினி.
61 வயதான இவர் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். கால மாற்றத்திற்கேற்ப தையல்கலையில் தன்னை மெருகேற்றிக் கொண்டு இளம் பெண்களை கவரும் வகையில் புதுமையான வேலைப்பாடுகளை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். தான் கற்றறிந்த விஷயங்கள் இளம் தையல்கலைஞர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் தையல்கலை புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் தையல்கலையின் நுணுக்கங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு வீட்டில் இருந்தே எளிதாக தையல்கலை கற்கும் ஆர்வத்தை விதைத்திருக்கிறார். அத்துடன் கணினியுகத்திற்கும் தன்னை இசைந்து கொடுத்து தையல்கலை பற்றிய குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய முயற்சி ஏராளமான பெண்களின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருப்பதாக பெருமிதம் கொள்கிறார். பத்மினியிடம் தையல் பயிற்சி பெற்ற பெண்கள் தொழில் முனைவோர்களாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்கள். முதுமையை விரட்டியடிக்கும் விதத்தில் பத்மினியின் கால்கள் தையல் இயந்திரத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. தையல் கலை மீது ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்கள் வயதான காலத்திலும் தடையின்றி வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கலாம் என்கிறார். தையல்கலை மீது தான் கொண்டிருக்கும் ஈடுபாடு குறித்தும், பெண்கள் தையல்கலையை தேர்ந்தெடுப்பதன் அவசியம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
‘‘எனது தாயார் கஸ்தூரி தையல் கலைஞர். நான் சிறுமியாக இருந்தபோது என் தாயாருக்கு கோவிந்தராஜ் என்பவர் தையல் சொல்லிக்கொடுக்க வீட்டுக்கு வருவார். எனது தாயார் ஜாக்கெட் தைக்க பழகுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அடிக்கடி அந்த தையல் ஆசிரியர் எனது தாயாரை திட்டிக்கொண்டே இருப்பார். அவர் சொல்லிக்கொடுக்கும் தையல் நுணுக்கத்தை நானும் கூர்ந்து கவனித்தேன். ஒருநாள் அந்த தையல் ஆசிரியரிடம் ‘ஜாக்கெட் மாடலை நான் பேப்பரில் வரைந்துள்ளேன். அைத உங்களிடம் காட்டட்டுமா?’ என்று கேட்டேன். அதை கேட்டு அவர் குழம்பி போய்விட்டார். ‘நான் உனக்கு கற்றுக்கொடுக்கவில்லையே? பிறகு எப்படி உனக்கு தெரியும்’ என்று வாங்கி பார்த்தவர் ஆச்சரியப்பட்டார். ‘கற்றுக் கொள்ளாமலேயே அருமையாக வரைந்திருக்கிறாய்’ என்று பாராட்டினார். அதன் பிறகு என் தாயார் தடுமாறும்போதெல்லாம் அவருக்கு நான் சொல்லிக்கொடுப்பேன். அதை ஒருநாள் என்னுடைய தந்தை பண்டரிநாதன் பார்த்துவிட்டார். அவர்தான் ‘உனக்கு தையல் மீது ஆர்வம் இருக்கிறது. அதையே முறைப்படி, படி என்று கூறி தையல் வகுப்பில் சேர்த்துவிட்டார். அங்கு நுணுக்கமான வேலைப்பாடுகளை கற்றுக்கொண்டேன்’’ என்கிறார்.
தையல் கலையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பத்மினியை கைதேர்ந்த தையல்கலை நிபுணராக மாற்றி இருக்கிறது. விதவிதமான ஜாக்கெட்டுகள் மற்றும் சுடிதார்களை தைத்து அசத்தியதோடு தன்னை தேடி வரும் பெண்களுக்கும் தையல் கற்றுக்கொடுக்க தொடங்கி இருக்கிறார். அதற்கான காரணத்தை விளக்குகிறார்.
‘‘என் கணவர் வெங்கட்ராமன், வாய் பேச முடியாதவர். அவரும் தையல் கலைஞர்தான். எனக்கும் அவர்தான் பல்வேறு விதங்களில் தொழில் கற்றுக்கொடுத்த குரு. அவருடைய வாழ்வாதாரத்திற்கு தையல்கலை கற்றதுதான் கைகொடுத்தது. அதுபோல் ஏழை, எளிய மக்கள் தங்கள் வருமானத்திற்கு தையல் தொழில் பக்கபலமாக இருக்கும் என் பதை என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். நான் கற்ற தையல் தொழில் என்னுடன் மறைந்து விடக்கூடாது. மற்றவர்களிடமும் அது சென்று சேர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளித்தேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் சுயமாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட தொடங்கினார்கள். அதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது.
மகிழ்ச்சியாக நகர்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில் விதி விளையாடியது. 1988-ம் ஆண்டு என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார். அந்த துயரத்தில் இருந்து மீள, எனது மகன் படித்த பள்ளியில் 5 ஆண்டுகள் தையல் ஆசிரியையாக பணியாற்றினேன். அங்குமாணவர்களுக்கு பயிற்சி அளித்தது அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்தி சென்றது. தையல் கலையில் கிடைத்த அனுபவத்தை கொண்டு ‘லேடீஸ் டெய்லரிங் ஸ்பெஷல்’ என்ற பெயரில் புத்தகம் எழுதினேன். அந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அது எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதாக பலரும் பாராட்டினார்கள். குறைவாக படித்திருக்கும் தையல் தெரியாத பெண்கள் கூட சுபலமாக தையல் கற்றுவிடலாம். அதற்கேற்ப ஜாக்கெட் தைக்க எவ்வாறு அளவு பார்ப்பது, கட்டிங் செய்வது, தைப்பது என்பது குறித்து தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் 400 விளக்கப்படங்களுடன் புத்தகத்தில் செய்முறை பயிற்சி வழங்கி இருக்கிறேன். வேலைக்கு செல்லும் பெண்கள், பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு தையல் வகுப்புக்கு செல்ல இயலாத பெண்கள், வயதான பெண்கள், தையல் வகுப்பை பாதியில் விட்டு மறந்து போனவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அது வழிகாட்டியது.
அமெரிக்காவுக்கும் சென்றடைந்தது. அங்குள்ள பெண்களும் பயனடைந்தனர். நான் தையலின் அனைத்து பரிமாணத்தையும் அங்குலம், அங்குலமாக கற்றுக்கொண்டுவிட்டேன். ஒரு சில நிமிடங்களிலேயே ஜாக்கெட்டுக்கு அளவு பார்த்து வெட்டி , தைத்துக்கொடுத்து விடுவேன்’’ என்கிறார்.
பத்மினி புத்தகங்களில் மட்டுமல்ல குறுந்தகட்டிலும் தையல் கலையின் அனைத்து நுட்பமான வேலைப்பாடுகளையும் அங்குலம் அங்குலமாக பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி தையல் மிஷினை பயன்படுத்தாமலேயே புதிய டிசைன்களை உருவாக்கும் பயிற்சியும் அளிக்கிறார். அதற்காக வாசவி தையல் பயிற்சி மையம் என்பதனை நடத்தி வருகிறார்.
‘‘பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஜாக்கெட்டிற்கு அளவு எடுப்பது எப்படி? கட் செய்வது எப்படி, தைப்பது எப்படி, பலவகை கழுத்து டிசைன்கள், கை டிசைன்கள் கட் செய்வது எப்படி, ஜாக்கெட்டில் மாற்றங்கள் செய்வது எப்படி என்பது பற்றி சுலபமாக அறிந்து கொண்டு பணம் சம்பாதிக்கலாம். அதுமட்டும் அல்லாமல் இன்றைய நவீன பேஷன் உலகத்திற்கு ஏற்ப சுடிதார், அவற்றின் கழுத்து மற்றும் கை டிசைன்கள் குறித்தும் தனித்தனியாக அறிந்து கொள்ளலாம்.
தையல் எந்திரத்தை பயன்படுத்தாமல் வீணாகும் சிறிய துணிகளை கொண்டு புதிய டிசைன்கள் வடிமைப்பது, பெரிய நிறுவனங்களுக்கு ஆல்பம் தயாரித்து கொடுத்து சம்பாதிப்பது பற்றியும் நான் பயிற்சி வழங்கி உள்ளேன். அவ்வப்போது கல்லூரிகளுக்கும் சென்று மாணவி களுக்கு ைதயல் கலையின் சிறப்பை எடுத்துரைக்கிறேன். இதுவரை என்னிடம் ஏராளமான பெண்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் பலரும் பல்வேறு விதமான டிசைன்களில் ஜாக்கெட் தைப்பது, தையல்கடைகளுக்கு துணிகளை வீட்டில் இருந்தபடியே கட்டிங் செய்து கொடுப்பது போன்றவற்றை செய்து வருகிறார்கள். ஜாக்கெட், சுடிதார் போன்றவற்றில் புதிய, புதிய டிசைன்கள், வடிவங்களை கொண்டு வந்து இன்னும் பல பெண்களை இந்த தொழிலில் சாதிக்க வைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனது மகன் முரளிராஜா, மருமகள் கிருத்திகா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்’’ என்கிறார்.