வறுமையை விரட்ட அரிவாள்.. வளமான எதிர்காலத்திற்கு புத்தகம்..
திருச்சி கே.கே.நகர் உழவர்சந்தையில் இளநீர் வியாபாரம் செய்யும் அந்த இளம்பெண்ணின் வேகமான செயல்பாடு பார்ப்பவர்களை எளிதாக கவர்ந்து விடும்.;
இளநீர் காயை சீவும்போது, ஒரு கையில் இருக்கும் இளநீர் தேங்காயும், மறுகையில் இருக்கும் அரிவாளும் முத்தமிட்டு தொட்டுத் தழுவிக் கொண்டதுபோல், இயல்பாக தோன்றுகிறது. அவ்வளவு நேர்்த்தியாக, லாவகமாக, மின்னல் வேகத்தில் காய்களை சீவுகிறார். கடையில் கூட்டம் குறைந்ததும், தந்தையின் பைக்கை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார். சிறிது நேரத்தில் இளநீர் காய்கள் ஏற்றிய சரக்கு வாகனத்தை அவரே ஓட்டிக் கொண்டு வருகிறார். அவரிடம் பேச்சுகொடுத்தபோது வேகமாக தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பதாகவும் சொன்னார். அந்த உற்சாக இளம் பெண்ணின் பெயர் உமாராணி. திருச்சி தேசிய கல்லூரியில் இளங்கலை உடற்கல்வியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.
கைத்தொழிலிலும், கல்வியிலும் கலக்கிக் கொண்டிருக்கும் உமாராணியுடன் நமது உரையாடல்:
“எங்கள் குடும்பம் வறுமை சூழல்கொண்டது. எனது பெற்றோர் நீண்ட காலமாக இளநீர் வியாபாரம்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். எனது தங்கை கமலா பிளஸ்-2 படித்து வருகிறார். பெற்றோர் உழைத்து எங்கள் இருவரையும் படிக்கவைக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக நானும் இந்த வியாபாரத்தை கவனித்து வருகிறேன். எப்படி இளநீர் காயை சீவவேண்டும் என்று அப்பாதான் எனக்கு கற்றுத்தந்தார். அவர் சீவுவதை பார்த்தும் நான் தெரிந்துகொண்டேன். இது கடினமான வேலை அல்ல. ஆனால் கவனமாக செய்யவேண்டும். கவனம் சிதறினால் அரிவாள், கையை பதம்பார்த்துவிடும். என் தந்தை வெளியூர் செல்லும்போது நானும், அம்மாவும் சேர்ந்து வியாபாரத்தை கவனித்துக்கொள்வோம். கல்லூரி நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை இளநீர் வியாபாரம் செய்வேன். மதியம் கல்லூரிக்கு செல்வேன்.
நான் வாகனங்களை ஓட்டவும் விரும்பினேன். பைக் ஓட்ட எளிதாக கற்றுக் கொண்டேன். சரக்கு வேனை ஓட்ட இரண்டு நாட்கள் பயிற்சி எடுத்தேன். எங்களுக்கு தேவையான இளநீர் காய்களை அந்த சரக்கு வாகனத்திலே கொண்டு வருவேன். மற்றவர்களின் தேவைக்காக வாடகைக்கும் ஓட்டி வருகிறேன். குறிப்பாக நாங்கள் குடியிருக்கும் பகுதியில் யாராவது வீடு காலி செய்து விட்டு வேறு இடங் களுக்கு சென்றால் சரக்கு வேனில் பொருட்கள் ஏற்றி இறக்குவேன். அது மட்டுமல்ல. வீட்டு உபயோக பொருட்களை சரக்கு வேனில் ஏற்றி, இறக்க தனியாக ஆட்கள் தேவை இல்லை. நானும் எனக்கு துணையாக எனது தங்கையும் சேர்ந்து பொருட்களை ஏற்றி, இறக்கி விடுவோம்” என்று உற்சாகமாக சொல்கிறார், உமாராணி.
இவருக்கு கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது. உடனே அதையும் கற்று, அதிலும் பல பரிசுகளை பெற்றிருக்கிறார். குத்துச்சண்டை பயிற்சியும் பெற்றுள்ளார். ஓட்டம், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். திருச்சியை சேர்ந்த தடகள வீரர் அண்ணாவி இவரை தடகளத்தில் ஊக்குவித்திருக்கிறார். காவல்துறையில் இணைந்து பணியாற்றுவது இவரது லட்சியமாக இருக்கிறது.
“நான் இரண்டு முறை போலீஸ் தேர்வுக்காக சென்றேன். உயரம் போதாது என்று தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும் நான் மனந்தளர்ந்துவிடவில்லை. நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். பட்டம் தேவை என்பதால் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகிறேன். காவல்துறை பணிக்காகவும் தனியாக பயிற்சி எடுத்து வருகிறேன்” என்று, போலீஸ் துறையில் சேர்ந்து சாதிக்கும் வேகத்தை வெளிப்படுத்துகிறார்.
அவரிடம் மேலும் சில கேள்விகள்:
உடற்கல்வி படிப்பை நீங்கள் தேர்வு செய்தது ஏன்?
“விளையாட்டு மீதுள்ள ஆர்வம்தான் அதற்கு காரணம். தேசிய மாணவர் படை பிரிவிலும் சேர்ந்திருக்கிறேன். விளையாட்டில் இருக்கும் ஆர்வம் எனக்கு புத்தக வழி கல்வியில் இல்லை. ஆனாலும் தோல்வியடையாமல், அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று விடுவேன்”
நீங்கள் யாரை முன்உதாரணமாகக் கொண்டு செயல்படுகிறீர்கள்?
“கிரண் பெடிதான் எனது ரோல் மாடல். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். காவல்துறையில் அவரது சாதனை வியப்பிற்குரியது”
படித்துக்கொண்டே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நீங்கள் எதற்காக பணத்தை செலவழிப்பீர்கள்?
“வெட்டிச்செலவு எதையும் செய்யமாட்டேன். புத்தகம் வாங்க மட்டுமே செலவழிப்பேன்”
இன்றைய பெரும்பாலான கல்லூரி மாணவிகள் பெற்றோர் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்பை கரைத்து விடுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
“பெற்றோர்கள் உழைப்பை மதிக்க வேண்டும். அவர்கள் சேமிப்பதே பிள்ளைகளுக்காகத்தான். தேவை இல்லாத செலவுகளை செய்து பெற்றோரது வருமானத்தை கரைப்பது அவமானத்திற்குரியது என்பது என் கருத்து”
உங்களது பொழுதுபோக்கு என்ன?
“காலையில் இளநீர் கடை, மதியம் கல்லூரி, அதிகாலையிலும் மாலையிலும் மைதானத்திற்கு சென்றுவிடுவேன். அங்கு மணிக்கணக்கில் தடகள பயிற்சிக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்வேன். நானும் என் சகோதரியும் இணைத்து யோகாசன பயிற்சிகளையும் மேற்கொள்வோம்”
தென்னை மரம் ஏறுவதை தொழிலாக செய்து கொண்டிருக் கிறீர்களா?
``பக்கத்து வீட்டிலோ, தெருவிலோ யாராவது அழைத்தால் தென்னை மரம் ஏறி தேங்காய், இளநீர் பறித்து தருவேன். ஆனால் அதை ஒரு தொழிலாக நான் செய்யவில்லை”
உங்களது உடல் அமைப்பு, உடை பற்றி உங்களது கருத்து என்ன?
“நான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்து உடற்பயிற் சிகளையும் மேற்கொள்ள முடிகிறது. குண்டு பெண்ணாக இருந்தால் இவ்வாறு பயிற்சி எடுக்க முடியாது. சுறுசுறுப்பாக வேலைபார்க்கவும் முடியாது. எனது உடல் அமைப்புக்கு ஏற்ற உடையான டி சர்ட், டிராக்சூட்டை பெரும்பாலும் அணிவேன். என்னை பார்ப்பவர்கள் நான் விளையாட்டு வீராங்கனை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்” என்றார்.
உமாராணியின் தந்தை செல்வம். தாய் சித்ரா. செல்வம் திருநெல் வேலியைச் சேர்ந்தவர். இவர் இளம் வயதிலே வேலை தேடி திருச்சி வந்திருக்கிறார். அங்கேயே சித்ராவை கலப்பு திருமணம் செய்திருக்கிறார்.
“நாங்கள் திருமணம் ஆனதில் இருந்தே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறோம். இரண்டும் பெண் குழந்தைகள் என்பதால், அவர்களது எதிர்காலத்துக்காக நானும் எனது கணவருடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு எங் களுக்கு 700 ரூபாய் வருமானம் கிடைக்கும். அதாவது ஒரு நாளைக்கு 200 இளநீருக்கு மேல் வியாபாரமாகும். வீட்டு வாடகை, இதர செலவுகள், பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகள் போன்றவை எல்லாம் சேர்ந்து எங்களை திணறடித்துவிடும். கல்விச் செலவுக்காக தாலி சங்கிலியை விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. மகள்கள் படித்து முடித்து வேலைக்கு சென்றதும் எங்கள் வறுமை தீர்ந்துவிடும்” என்று சித்ரா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
செல்வம் கூறுகையில், “எனது மகள்களை ஆண் பிள்ளைகள் போல் வளர்த்து இருக்கிறேன். பெண்ணாக பிறந்து விட்டார்களே என நான் வருத்தப்பட்டது கிடையாது. எங்கள் குடும்பத்தின் நிலை அறிந்து அவர்கள் கல்வியையும் தொடர்ந்து கொண்டே விளையாட்டுகளிலும் வெற்றிவாகை சூடுகிறார்கள். எங்களுக்கு உதவியாக வேலைகளும் செய்கிறார்கள். நானும், எனது மனைவியும் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை. பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கத்தான் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
பாராட்டப்படவேண்டியவர்தான்!