நாசிக் அருகே வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதல் 7 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி சாவு
நாசிக் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பெண்கள் உள்பட 8 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
நாசிக்,
நாசிக் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பெண்கள் உள்பட 8 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
டயர் வெடித்து விபத்து
துலே மாவட்டத்தில் இருந்து நாசிக்கில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு ஒரு குடும்பத்தினர் வேனில் நேற்று புறப்பட்டனர். இந்த வேன் மும்பை-ஆக்ரா சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேனும் எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
8 பேர் சாவு
இந்தகோர விபத்தில் 7 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது விபத்து குறித்து வட்னேர் பைரவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.