பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் முதல்-மந்திரி பட்னாவிஸ் வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்கள் தடையை வெற்றிபெற செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை,
பிளாஸ்டிக் பொருட்கள் தடையை வெற்றிபெற செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடை
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப் பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்துழைக்க வேண்டும்
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வெற்றி பெற முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கத்தை மக்கள் இடையே வளர்க்க விரும்புகிறோம். இதனால்தான் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களையும், மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களையும் தடை செய்து இருக்கிறோம்.
கவனத்தில் கொள்ளப்படும்
பிளாஸ்டிக் தடையின் பெயரால் அதிக கெடுபிடிகளை ஏற்படுத்த விரும்பவில்லை. சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள முயற்சிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.