மின்கட்டண வசூல் ரூ.16½ லட்சம் மோசடி: ஊழியர்கள் 2 பேர் கைது

மின்நுகர்வோர் செலுத்திய மின் கட்டண பணம் 16 லட்சத்து 39 ஆயிரத்தை ஊழியர்கள் 2 பேர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.;

Update: 2018-06-23 21:22 GMT
திரு.வி.க. நகர், 

தமிழ்நாடு மின்சார வாரியம் ஓட்டேரி பிரிவு அலுவலக மின்கட்டணம் வசூல் மையத்தில் வருவாய் மேற்பார்வையாளராக வெங்கடேசன் (வயது 48), கணக்கீட்டு ஆய்வாளராக சீனிவாசன் (56) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் மின்நுகர்வோர் செலுத்திய மின் கட்டண பணம் 16 லட்சத்து 39 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் அரங்கேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், சீனிவாசன் ஆகியோரை பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையிலான கால கட்டத்தில் வாடிக்கையாளர்கள் கட்டிய மின்கட்டணத்தை முறையாக வங்கியில் செலுத்தாமல் ஆடம்பர செலவு செய்ய ஆசைப்பட்டு கையாடல் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே 2 பேரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

மேலும் செய்திகள்