திருச்சி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 265 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 265 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர்,
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் திருவெறும்பூர் கடைவீதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. தலைமையில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்த திருவெறும்பூர் போலீசார் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் மொத்தம் 5 பெண்கள் உள்பட 96 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் லால்குடியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் செயற்குழு உறுப்பினர் வைரமணி, மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, துணை செயலாளர் கர்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து லால்குடி போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
துறையூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேரை துறையூர் போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் கடைவீதியில் நேற்று மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூறாவளி பிச்சை தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.அவர்களை சமயபுரம் போலீசார் கைது செய்தார். இதேபோல் மண்ணச்சநல்லூரில் எதுமலை பிரிவு ரோட்டில் ஒன்றிய செயலாளர் (மேற்கு) செந்தில் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
தொட்டியத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 28 பேரை தொட்டியம் போலீசார் கைது செய்து ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஒன்றிய செயலாளர் சபியுல்லா தலைமையில் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 17 பேரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதேபோல் மணப்பாறையில் பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், நகர செயலாளர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கவர்னர் பதவி விலக வேண்டும் என்றும், மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை கடைவீதியில் நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், கட்சி நிர்வாகிகள் சிட்டிலரை சிவா, கருணாநிதி, பெரியசாமி, ரமேஷ், சேகர் உள்பட தி.மு.க.வினர் 20 பேர் நாமக்கல்- துறையூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தார். திருச்சி மாவட்டத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் 265 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.