அழகியமண்டபம், குளச்சலில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 35 பேர் கைது

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு சென்றார். இந்த ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2018-06-23 22:45 GMT
அழகியமண்டபம்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு சென்றார். இந்த ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமையில் அழகியமண்டபத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் குளச்சல் நகர தி.மு.க.செயலாளர் நசீர் தலைமையில் அண்ணாசிலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மாவட்ட தி.மு.க.துணை செயலாளர் அர்ஜூனன், முன்னாள் கவுன்சிலர்கள் நூர்முகம்மது, ரகீம், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மரிய ரூபன், பிரதிநிதி பனிக்குருசு, ரீத்தாபுரம் பேரூர் செயலாளர் கோபாலதாஸ், ஆசிரியர் அமீர் உசேன், நகர தொண்டரணி சாகுல்அமீது, மீனவரணி சேவியர் மற்றும் முகம்மது சாலி, பெஞ்சமின், சிராஜிதீன், மனோ உள்பட பலர் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் 13 பேரை கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்